பிக்பாஸ் சீசன் 10: TTF வாசனை வெளியேற்ற ரெட் கார்டு வியூகமா?
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் TTF வாசனைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் புதிய திருப்பத்தை எடுத்து வருகின்றன. வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே வந்தபோது நிகழ்ச்சியின் விதிமுறைகளைப் புரிந்துகொள்ளத் தடுமாறிய வாசன், 'டைமண்ட் டாஸ்க்' மற்றும் சர்வைவல் டாஸ்க்குகளில் சிறப்பாக விளையாடி, இன்று வீட்டின் வலுவான போட்டியாளர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். வெளியுலகில் அவருக்கு இருக்கும் பெரிய ரசிகர் பட்டாளத்தால், நாமினேஷனில் வந்தாலும் மக்கள் வாக்குகளால் அவர் காப்பாற்றப்படலாம் என்ற எண்ணம் வீட்டுக்குள்ளும் நிலவுவதாகத் தெரிகிறது. இந்தச் சூழலில், ஹாட்ஸ்டார் லைவ் ஸ்ட்ரீமிங்கில் முகேஷ் பேசிய உரையாடல் பார்வையாளர்களிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வாசனைத் தூண்டிவிடப் போவதாகவும், அப்போது வாசன் தன்னை அடித்தால் ரெட் கார்டு மூலம் அவர் வெளியேற்றப்படுவார் என்றும் முகேஷ் பேசுவது லைவ் ஸ்ட்ரீமிங்கில் காணப்பட்டது. இதை லைவ் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். முன்னதாக, "அவர் என்னை அடித்தால் ரெட் கார்டு கிடைத்துவிடும், அதனால்தான் அமைதியாக இருந்தேன்...