செப்டெம்பர் 19ல் ஐபிஎல் போட்டிகள் தொடக்கம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்.19 முதல் நவ.10 வரை ஐபிஎல் போட்டிகள் - ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு



ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து முடிவு செய்ய இந்தியன் பிரீமியர் லீக் நிர்வாக குழு (ஐபிஎல் ஜிசி) நேற்று காணொளி கட்சி மூலம் கூடியது. இந்தியாவில் நிலவும் கோவிட்-19 வைரஸ்  நோயின் நிலைமையை கவனத்தில் கொண்டு, ஐபிஎல் ஜி.சி இந்த போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) இல் நடத்த முடிவு செய்து, இந்திய அரசாங்கத்தின் தேவையான அனுமதிகளை பெற்றதாகவும் துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபியில் போட்டிகள் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.


ஐபிஎல் 2020 கிரிக்கெட்  போட்டியனது செப்டம்பர் 19 தொடங்கி நவம்பர் 10, வரை நடைபெறும். 53 நாள் நடைபெறும் இந்த போட்டிகளில் 10 மதிய போட்டிகள் உள்ளன அவை இந்திய நேரப்படி மதியம் 3:30 க்கு தொடங்கும், மாலை போட்டிகள் இந்திய நேரப்படி மாலை 07:30 IST மணிக்கு தொடங்கும் என அர்விக்கப்பட்டுள்ளது


மகளிர் 2020 ஐபிஎல் போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும், மேலும் மகளிர் கிரிக்கெட் போட்டியில் மூன்று அணிகள் இடம்பெறும் எனவும் நான்கு போட்டிகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

 

இந்த ஆண்டு விவோ நிறுவனமே ஐபிஎல் போட்டியின் டைட்டில் ஸ்பான்ஸராக  தொடர்ந்து இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது


Comments

Popular posts from this blog

Microsoft and AICTE collaborate to skill students and educators in next generation technologies

The Union Budget will give a big boost to Tourism in the country

Ather Energy introduces a Buyback Program on the Ather 450X