தமிழகத்தில் சட்டபடிப்பு சேர்க்கை துவக்கம் 5-ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
5ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு வரும் 5-ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் அறிவிப்பு
சென்னை, 01 ஆகஸ்ட் 2020: தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளிவந்த நிலையில் கலை,அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை துவங்கி உள்ளனர்
இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாகவும் அரசின் விதிமுறைகளின் படி கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வழங்குவத்திலிருந்து சான்றிதழ் சரிபார்ப்பு முதல் கல்லூரிகள் ஒதுக்குவது வரை அனைத்துமே ஆன்லைனில் நடைபெறும் என தெரிகிறது, மாணவர்களும் தங்கள் விரும்பிய படிப்பு மற்றும் கல்லூரிகளில் விண்ணப்பிக்க துடங்கிவிட்டனர் இந்த நிலையில் சட்டபடிப்புகளுக்கான சேர்க்கை எப்போது துவங்கப்படும் என மாணவர்கள் காத்துயிருந்தனர்
இதனை தொடர்ந்து தமிழகத்தில் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு வரும் 5-ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. வரும் 5-ஆம் தேதி முதல் www.tndalu.ac.in என்ற தளத்தில்விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம் எனவும் 10 ஆம் தேதி முதல் நேரடியாக விண்ணப்பங்கள் வழங்கபடும் எனவும் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்றும், மூன்றாண்டு முதுகலை சட்ட மேற்படிப்புக்கான விண்ணப்பம் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Comments
Post a Comment