தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளார்
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் ஐந்தாவது தொடர் இரண்டாவது முறையாக ஒத்திவைப்பு
தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்) கிரிக்கெட் போட்டியின் ஐந்தாவது தொடர் இரண்டாவது முறையாக கொரோன நோய்த்தொற்றுக் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது, இந்த ஆண்டு நவம்பரில் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்தலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் உள்ளது ஆரம்பத்தில் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் திட்டமிடப்பட்டிருந்த இந்த பிரபலமான டி 20 லீக் போட்டி, மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்ததால் மே மாதம் தமிழக கிரிக்கெட் வாரியத்தால் இது தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் "டிஎன்பிஎல் போட்டியின் 5 வது தொடர் ஜூலை,ஆகஸ்ட்,செப்டெம்பர் மாதங்களில் நடத்தலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் இருந்தது. இருப்பினும், தமிழ்நாட்டில் கொரோன நோய்த்தொற்று பிரச்சினை காரணமாக தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் இந்த போட்டிகளை நடத்தும் நிலையில் இல்லை எனவும் 5வது தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை 2020 நவம்பர் அல்லது 2021 மார்ச் மாதத்தில் நடத்த வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய செயலாளர் ராமசாமி ஒரு செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்,
அஸ்வின், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் மற்றும் முரளி விஜய் போன்ற மாநிலத்தின் சிறந்த வீரர்கள் டி.என்.பி.எல் இல் பங்கேற்கின்றனர், மேலும் இந்த போட்டிகள் மூலம் வருண் சக்ரவர்த்தி மற்றும் சாய் கிஷோர் போன்ற இளம் வீரர்கள் ஐ.பி.எல் அணிகளுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment