சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகைகள் பெற இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்
சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் முதியோர், விதவை உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகை பெற இ-சேவை மையத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்
சென்னை மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை திட்டங்களுக்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு இசேவை மையம் வழியாக பொதுமக்கள் விண்ணப்பித்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது
இதேபோல், இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, இந்திரா காந்தி தேசிய விதவை உதவித்தொகை இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் தொகை ஆதரவற்ற விதவைகள் உதவித்தொகை, ஆதரவற்ற கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித்தொகை, ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, திருமணமாகாத 50 வயதுக்கு மேற்பட்ட ஏழை பெண்களுக்கான உதவித்தொகை முதல் அமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்ட உதவித்தொகை ஆகிய திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு அரசு இ-சேவை மையம் மூலம் இணையதளம் வழியாக விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ந.காளிதாஸ், அவர்கள் அறிவிப்பு
Comments
Post a Comment