அன்று பெரியாரின் தீர்மானம் இப்பொழுது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு
பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!!
பெண் அடிமைத்தனத்தையும் ஆண் ஆதிக்கத்தையும் ஒழிப்பதுடன் பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்கும் வகையில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கவேண்டும் என 1929ம் ஆண்டு தந்தை பெரியார் செங்கல்பட்டு மாநாட்டில் புரட்சிகரமான தீர்மானம் கொண்டுவந்தார் இதனை தொடர்ந்து 1989-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களால் பெரியார் வழியில் தமிழகத்தில், 'குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை உண்டு' என்று சட்டம் கொண்டுவரப்பட்டது அதேபோல, 2005-ம் ஆண்டு மத்திய அரசால் நாடு முழுவதும் பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை வழங்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
2005ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இந்து சொத்துரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் பதிவானது. இந்த வழக்குகள் கடந்த சில ஆண்டுகளாக விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக நீதிபதி அருண்குமார் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பில், திருத்தப்பட்ட இந்து வாரிசு சட்டத்தின்படி மகனை போன்று மகளும் சொத்தின் சம பங்கை பெறும் உரிமை உள்ளது சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக சொத்துதாரர் இறந்திருந்தாலும் பெண்ணுக்கு சம பங்கு பெறும் உரிமை உள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த திர்பானது அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
Comments
Post a Comment