சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவிப்பு

தோனியின் அறிவிப்பை தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும்  சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு


இந்திய கிரிக்கெட் அணியின்  ஜாம்பவான் மற்றும் அனைவராலும் தல என அழைக்கப்படும் உலகிலேயே மிக சிறந்த கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ். தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வுபெருவதாக இன்று இன்ஸ்டக்ராம் பதிவில் அறிவித்துள்ளார், 

அவர் வெளியிட்ட அந்த பதிவில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற நாள் முதலான தனது புகைப்படங்களை வீடியோ வடிவில் வெளியிட்டு என்னை ஆதரித்து அன்பு காட்டிய அனைத்து ரசிகர்களுக்கும் மிக்க நன்றி: என  தோனி தெரிவித்துள்ளர்

கடைசியாக தோனி 2019 அம் ஆண்டு நடந்த இந்தியா நியூஸிலாந்து க்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணிக்காக விளையாடினார் 


தோனியின் அறிவிப்பை தொடர்ந்து சின்ன தல என்று அழைக்கப்படும் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஆன சுரேஷ் ரெய்னாவும்  சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை தோனியை போல் அவரும் இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியிட்டார்.

ரெய்னா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில் தோனி உள்ளிட்ட மற்ற இந்திய வீரர்களுடன் தான் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ரெய்னா, "தோனி, உங்களுடன் இணைந்து விளையாடியது என்றுமே இனிமையாக இருந்ததே தவிர வேறுஎதுவும் இல்லை. என் இதயம் முழுக்க பெருமிதத்துடன், நானும் உங்களோடு இந்தப் பயணத்தில் இணைகிறேன். நன்றி இந்தியா. ஜெய்ஹிந்த்" என்று அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்

தோனி மற்றும் ரெய்னாவின் இந்த தொடர் அறிவிப்புகளால் அவர்களின் ரசிகர்கள் மிகவும் சோகமாக உள்ளனர்

Comments

Popular posts from this blog

Microsoft launches its new engineering hub in NCR

Microsoft and AICTE collaborate to skill students and educators in next generation technologies

The Union Budget will give a big boost to Tourism in the country