கோவிட் -19 காரணமாக இந்தியாவின் உழைக்கும் பெண்கள் அதிக மன அழுத்தத்தை உணர்கிறார்கள்: லிங்க்ட்இன் ஆய்வு
சென்னை 10 செப்டம்பர் 2020 - (ANI): கோவிட் -19 தொற்றுநோயால் கிட்டத்தட்ட 47 சதவீத இந்திய பெண்கள் அதிக மன அழுத்தத்தை அல்லது பதட்டத்தை அனுபவித்து வருவதாக இன்று வெளியிடப்பட்ட லிங்க்ட்இன் தொழிலாளர் நம்பிக்கை ஆய்வின் 10 வது பதிப்பில் (10th edition of the LinkedIn Workforce Confidence Index) தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த சோதனை காலங்களில் பெண்களுக்கு ஏற்றத்தாழ்வான தாக்கத்தை சுட்டிக்காட்டுகிறது. தொற்றுநோய்களின் போது குழந்தை பராமரிப்பின் சவால்களையும் இந்த ஆய்வு சுட்டிகாட்டுகிறது.ஆண்களைப் பொறுத்தவரை, இந்த எண்ணிக்கை 38 சதவீதமாக இருக்கிறது இந்தியாவில் 2,254 நபர்களிடமிருந்து பெறப்பட்ட கணக்கெடுப்பு பதில்களின் அடிப்படையில், ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 23 வரையிலான வாரங்களில் இந்தியாவின் உழைக்கும் தாய்மார்கள் மற்றும் உழைக்கும் பெண்கள் மீதான தோற்றுநோய்யின் தாக்கத்தை இந்த ஆய்வு காட்டுகிறது, ஒர்க் ஃப்ரம் ஹோம்(Work from Home) முறையில் இந்தியாவின் உழைக்கும் தாய்மார்களுக்கு ஒரு கடினமான பாதையை அமைத்துள்ளது, கணக்கெடுப்பில் மூன்றில் ஒரு (31 சதவீதம்) வேலை செய்யும் தாய்மார்கள் தற்போத...