கோவிட் -19 காரணமாக இந்தியாவின் உழைக்கும் பெண்கள் அதிக மன அழுத்தத்தை உணர்கிறார்கள்: லிங்க்ட்இன் ஆய்வு

சென்னை 10 செப்டம்பர் 2020 - (ANI):கோவிட் -19 தொற்றுநோயால் கிட்டத்தட்ட 47 சதவீத இந்திய பெண்கள் அதிக மன அழுத்தத்தை அல்லது பதட்டத்தை அனுபவித்து வருவதாக இன்று வெளியிடப்பட்ட லிங்க்ட்இன் தொழிலாளர் நம்பிக்கை 
ஆய்வின் 10 வது பதிப்பில் (10th edition of the LinkedIn Workforce Confidence Index) தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த சோதனை காலங்களில் பெண்களுக்கு ஏற்றத்தாழ்வான தாக்கத்தை சுட்டிக்காட்டுகிறது. தொற்றுநோய்களின் போது குழந்தை பராமரிப்பின் சவால்களையும் இந்த ஆய்வு சுட்டிகாட்டுகிறது.ஆண்களைப் பொறுத்தவரை, இந்த எண்ணிக்கை 38 சதவீதமாக இருக்கிறது

இந்தியாவில் 2,254 நபர்களிடமிருந்து பெறப்பட்ட கணக்கெடுப்பு பதில்களின் அடிப்படையில், ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 23 வரையிலான வாரங்களில் இந்தியாவின் உழைக்கும் தாய்மார்கள் மற்றும் உழைக்கும் பெண்கள் மீதான தோற்றுநோய்யின் தாக்கத்தை இந்த ஆய்வு காட்டுகிறது, 

ஒர்க்  ஃப்ரம் ஹோம்(Work  from Home) முறையில் இந்தியாவின் உழைக்கும் தாய்மார்களுக்கு ஒரு கடினமான பாதையை அமைத்துள்ளது, கணக்கெடுப்பில் மூன்றில் ஒரு (31 சதவீதம்) வேலை செய்யும்
 தாய்மார்கள் தற்போது குழந்தை பராமரிப்புக்கு முழுநேரத்தை வழங்குகிறார்கள், இது வேலை செய்யும் தந்தையுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட ஐந்து பேரில் ஒருவர் (17 சதவீதம்) அகஇருக்கின்றது

கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், ஐந்தில் இரண்டு (44 சதவீதம்) வேலை செய்யும் அம்மாக்கள் குழந்தை பராமரிப்பு வழங்குவதற்காக தங்கள் வணிக நேரத்தை விட அதிகமாக வேலை செய்கிறார்கள், இது ஆண்களுடன் ஒப்பிடுகையுள் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு  (25 சதவீதம்) அதிகமாகவுள்ளது.

 குழந்தை பராமரிப்பிலிருந்து வரும் கவனச்சிதறல்களின் தாக்கத்தை வேலை செய்யும் தாய்மார்கள் அதிகம் தாங்குவதாகவும் அதே வேளையில் ஆண்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவை நாடுகிறார்கள் என தரவு தெரிவிக்கிறது

32 சதவீத ஆண்களுடன் ஒப்பிடும்போது, ​​ஐந்து பேரில் ஒருவர் (20 சதவீதம்) வேலை செய்யும் தாய்மார்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்கு ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது நண்பரை நம்பியிருப்பதாக கணக்கெடுப்பு காட்டுகிறது.

46 சதவிகிதத்திற்கும் அதிகமான உழைக்கும் தாய்மார்கள் வேலை செய்து முடிக்க தாமதமாகிறது எனவும் மேலும் 42 சதவிகிதத்தினர் தங்கள் குழந்தைகளுடன் வீட்டில் வேலை செய்வதில் கவனம் செலுத்த முடியவில்லை என்று அறிக்கை காட்டுகின்றது,

Comments

Popular posts from this blog

Indkal Technologies Raises 300 Crores in Series A Funding

Truck Rentals Climb Ahead of Festive Season

Yoga and Ayurveda: A Journey to Wholeness