டி.வி.எஸ் ரேசிங் 2021 மகளிர் பைக் ரேஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் தொழிற்சாலை பந்தய அணியான டி.வி.எஸ் ரேசிங், ஆர்வமுள்ள பெண் பைக் ரேசர்களை  டி.வி.எஸ் மகளிர் ஒன் மேக் சாம்பியன்ஷிப் பைக் ரேஸ் பந்தயத்தின் 2021 பதிப்பில் பங்கேற்க அழைக்கிறது. இந்த போட்டியின் தேர்வு சுற்றுகள் முறையே மும்பை மற்றும் பெங்களூரில் ஜனவரி 23 மற்றும் ஜனவரி 30 ஆகிய தேதிகளில் நடைபெறும். இதனை தொடர்ந்து ஏப்ரல் 2021 இல் சென்னையின் மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக்கில் (எம்.எம்.ஆர்.டி) இறுதி தேர்வு சுற்று நடைபெறும்.



ரேஸ் ஸ்பெக் டி.வி.எஸ் அப்பாச்சி ஆர்.டி.ஆர் 200 4வி உடன் ரைடர்ஸ் தங்களை நன்கு பயிற்சிப்படுத்திக்கொள்ளும் விதமாக டிவிஎஸ் ரேசிங்கின் தேசிய சாம்பியன்களால் நடத்தப்படும் ஒரு முழு நாள் பயிற்சி வகுப்பு இதில் அடங்கும்.


அவர்களின் சிறந்த லெப் டைமிங், உடல் தகுதி மற்றும் பந்தய திறன்களின் அடிப்படையில், ஒவ்வொரு நகரத்திலிருந்தும் முதல் பதினாறு ரைடர்ஸ் தேர்வு செய்யப்படுவார்கள். ஏப்ரல் 2021 இல் சென்னை மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக்கில் (எம்.எம்.ஆர்.டி) இறுதி சுற்று நடைபெறும். பெங்களூரு தேர்வு சுற்று ஹென்னூரில் உள்ள மெக்கோ கார்டோபியாவிலும், மும்பை தேர்வு சுற்று வட்டாலாவில் உள்ள அஜ்மேரா இண்டிகார்ட்டிங்கிலும் நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைப்பில் பதிவு செய்யலாம்: https://www.tvsracing.com/tvs-womens-one-make-racing.aspx

Comments

Popular posts from this blog

Indkal Technologies Raises 300 Crores in Series A Funding

Truck Rentals Climb Ahead of Festive Season

Yoga and Ayurveda: A Journey to Wholeness