இந்திய ராணுவத்தின் இணையவழி ஓவியப் போட்டி
கடந்த 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி பெற்றதன் 50-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் நடைபெற்றுவரும் ஸ்வர்ணிம் விஜய் வர்ஷ் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை இணைய வழி ஓவியப் போட்டிக்கு இந்திய ராணுவம் ஏற்பாடு செய்துள்ளது. இந்திய குடிமக்கள் அனைவரும் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு தங்களது படைப்புகளை swarnimvijayvarsh.adgpi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். இந்தப் போட்டி குறித்த கூடுதல் விவரங்கள் இந்திய ராணுவத்தின் முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட ஓவியங்கள், இந்திய ராணுவத்தின் அதிகாரபூர்வமான ஊடகங்களில் பயன்படுத்தப்படுவதுடன் வெற்றிபெறும் படைப்புகளுக்கு உரிய அங்கீகாரத்துடன் ரொக்கப்பரிசும் வழங்கப்படும். ஓவியப் போட்டியைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளும், போட்டிகளும் நடைபெறவுள்ளன. இது பற்றிய விரிவான தகவல்கள் அச்சு மற்றும் சமூக ஊடகங்களின் வாயிலாக தெரிவிக்கப்படும். 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற விடுதலைப் போரில் இந்திய ராணுவப் படைகளின் பங்களிப்பு பற்றி சக குடிமக்களுக்கு எடுத்துரைத்து, அவர்களுடனான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்திய ராணுவம் இந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
Comments
Post a Comment