சுய வேலைவாய்ப்பை வழங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அரசு வேலைகளை விட கவர்ச்சிகரமாக உள்ளன: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
சுய வேலைவாய்ப்பை வழங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அரசு வேலைகளை விட கவர்ச்சிகரமாக உள்ளன என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று கூறினார். குறைவான சம்பளத்தில் ஒரு சிறிய அரசு வேலையை விரும்பும் மனநிலையை மாற்ற வேண்டிய தேவை இருப்பதாகவும் அவர் கூறினார்.
சிஎஸ்ஐஆர் - ஐஐஐஎம்மில் நடைபெற்ற சிஎஸ்ஐஆர் அரோமா இயக்கத்தின் பகுதி இரண்டின் கீழ் நடைபெற்ற விவசாயிகளுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து வேளாண் புது நிறுவனங்கள், இளம் தொழில்முனைவோர் மற்றும்l விவசாயிகளிடையே உரையாடிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சருடன் உரையாடிய இளைஞர் ஒருவர் விவசாயத்தில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெறும் ஒரு ஹெக்டேர் நிலத்திலிருந்து வருடத்திற்கு ரூபாய் 3 லட்சம் ஈட்டியதாக கூறினார். ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் மூலம் தங்களது வருமானம் வெறும் ஐந்து மாதங்களில் இரட்டிப்பானது என்று இரண்டு பிடெக் பட்டதாரிகள் தெரிவித்தனர்.
மாதம் ரூபாய் 6 ஆயிரத்துக்கு மிகாமல் ஊதியம் தரும் வேலைகளுக்காக இளைஞர்கள் போராடுவதாகவும், அதே சமயம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வசதியான வாழ்வாதாரத்தை அவர்களுக்கும் அவர்களது நண்பர்களுக்கும் வழங்குவதாகவும் அமைச்சர் கூறினார்.
2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி விடுத்துள்ள அறைகூவல் குறித்து குறிப்பிட்ட திரு. ஜிதேந்திர சிங், உற்பத்தியை விட உற்பத்தித் திறன் மீது விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என கூறினார்..
Comments
Post a Comment