Posts

Showing posts from December, 2023

பரங்கி மலை மெட்ரோ பார்க்கிங் தற்காலிகமாக முடல்

Image
சென்னை: கனமழை காரணமாக டிசம்பர் 5, 2023 காலை 10 மணி வரை பரங்கி மலை மெட்ரோ நிலையத்தின் பார்க்கிங் வசதி தற்காலிகமாக மூடப்படும். இந்த காலகட்டத்தில் பயணிகள் அறிஞர் அண்ணா அலந்தூர் மெட்ரோ மற்றும் நங்கைநல்லூர் ரோடு நிலையங்களில் உள்ள பார்க்கிங் வசதிகளைப் பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று சென்னை மெட்ரோ ரயில் நிலையம் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது  மேலும் அந்த அறிக்கையில் பரங்கி மலை நிலையத்தில் ஏற்கனவே தங்கள் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ள பயணிகள் அவர்களின் வாகனங்களின் பாதுகாப்பிற்காக அவற்றை விரைவில் அகற்றுமாறு கேட்டுக்கொள்ளபடுகின்றனர்.

சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு டிசம்பர் 4-ம் தேதி பொது விடுமுறை

Image
சூறாவளி மிக்ஜாம் காரணமாக டிசம்பர் 4-ம் தேதி திங்கட்கிழமை சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. Negotiable Instruments Act, 1881-ன் கீழ்  பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. "எவ்வாறாயினும், காவல் துறை, தீயணைப்புத்துறை, உள்ளாட்சி அமைப்புகள், பால் விநியோகம், நீர் வழங்கல், மருத்துவமனைகள்/மருந்துக்கடைகள், மின்சாரம், போக்குவரத்து, எரிபொருள் நிலையங்கள், ஹோட்டல்கள்/உணவகங்கள் போன்ற அனைத்து அத்தியாவசிய சேவைகள் மற்றும் பேரிடர் முகாமையாளுதல், நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும்" என்று தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TVS மோட்டார் நிறுவனம் 31% விற்பனை வளர்ச்சியைக் கண்டது

Image
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் நவம்பர் 2023 இல் 31% விற்பனை அதிகரிப்பைக் கண்டது, மொத்த விற்பனை 364,231 யூனிட்கள் ஆகும். உள்நாட்டு இருசக்கர வாகன விற்பனை 50% அதிகரித்தது, மோட்டார்சைக்கிள் விற்பனை 19% அதிகரித்தது, ஸ்கூட்டர் விற்பனை 62% அதிகரித்தது. மின்சார வாகன விற்பனை 67% அதிகரித்து, 16,782 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டன. சர்வதேச வணிக விற்பனை 5% அதிகரித்து, மொத்த ஏற்றுமதி 75,203 யூனிட்கள் ஆகும்.

ஸ்மிருதி மந்தனா பிஎன்பி மெட்லைஃப் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டார்

Image
சென்னை, டிசம்பர் 3, 2023: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, பிஎன்பி மெட்லைஃப் நிறுவனத்தின் புதிய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த கூட்டணி மூலம், ஸ்மிருதி மந்தனா பிஎன்பி மெட்லைஃப் நிறுவனத்தின் "பெரிய கனவு காண தயாராகுங்கள்" என்ற செய்தியை ஒவ்வொரு இந்தியருக்கும் கொண்டு செல்வார். ஸ்மிருதி மந்தனா தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சவால்களையும் வெற்றிகளையும் சந்தித்துள்ளார். அவரது விடாமுயற்சி, நம்பிக்கை மற்றும் ஒழுக்கம் ஆகியவை அவருக்கு இன்று உலகின் சிறந்த பெண் கிரிக்கெட் வீராங்கனைகளில் ஒருவராக உயர உதவியுள்ளன. பிஎன்பி மெட்லைஃப் நிறுவனம், ஸ்மிருதி மந்தனாவின் இந்த குணங்களை தனது நிறுவனத்தின் மதிப்புகளுடன் ஒன்றிணைத்துக் கொள்கிறது. இந்த கூட்டணி குறித்து பிஎன்பி மெட்லைஃப் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆஷிஷ் கே ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "ஸ்மிருதி மந்தனாவின் வெற்றிக்கதை ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு உத்வேகம். அவரது விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு, அனைத்து இந்தியர்களையும் பெரிய க...

#ரத்னம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது

Image
மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் #ரத்னம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சென்னையில் வெளியிடப்பட்டன. விஷால் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகி பாபு மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஹரி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். முதல் லுக் போஸ்டர்களில் விஷால் மிகவும் ஸ்டைலாகவும், கம்பீரமாகவும் இருக்கிறார். அவரது தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன இந்த போஸ்டர்கள்.