Posts

Showing posts from August, 2020

செம்பாக்கம் ஏரி மறுசீரமைப்பு செய்யும் பணியில் காக்னிசண்ட் மற்றும் கிரண்ட்ஃபோஸ்

Image
செம்பாக்கம் ஏரி மறுசீரமைப்பு செய்யும் பணியில் காக்னிசண்ட் மற்றும் கிரண்ட்ஃபோஸ் Source -  GRUNDFOS உலகின் முன்னணி தொழில்முறை சேவை நிறுவனங்களில் ஒன்றான  காக்னிசண்ட் மற்றும் மேம்பட்ட பம்ப் தீர்வுகள் மற்றும் நீர் தொழில்நுட்பத்தில் உலகளாவிய தலைவரான கிரண்ட்ஃபோஸ் இன்று சென்னையில் உள்ள செம்பாக்கம் ஏரியை  மறுசீரமைப்பு செய்வதற்கான நிதி ஆதரவை அறிவித்துள்ளனர். காக்னிசண்ட் 2.7 கோடிக்கு மேல் பங்களிக்கும், கிரண்ட்ஃபோஸ் 1.7 கோடி ரூபாயும் அதனுடன் சிவில் பணிகள், கழிவு நீர் சுத்திகரிப்பிற்காக 7.5 லட்சம் ருபையை பங்களிக்கும். உலகின் மிகப் பெரிய பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றான தி நேச்சர் கன்சர்வேன்சியின் இந்தியா அத்தியாயத்துடன் மற்றும்  இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மெட்ராஸ் மற்றும் சென்னையைச் சேர்ந்த கேர் எர்த் டிரஸ்ட், பல்லுயிர் பாதுகாப்பு பகுதியில் செயல்படும் ஒரு அரசு சாரா அமைப்பு ஆகியவற்றுடன் இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து இத்திட்டத்தில் பணிபுரியும், 2021 ஆம் ஆண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் இந்த பணியில், உட்புறம் மற்றும் வெளிப்புரங்களை சுத்தம் செய்தல், மேல்நிலை மற்றும் கீழ்நிலை நீர்ந

தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும்!

Image
கட்டணம் செலுத்தாவிட்டாலும் செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் -அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது இதில்  தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களின் முடிவுகள் வெளியிடவில்லை. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரியில் படிக்கும்  மாணவர்கள் இருவர் தொடர்ந்த வழக்கில், ‘செமஸ்டர் தேர்வு கட்டணம் செலுத்தினாலும் செலுத்தாவிட்டாலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்கக்கூடாது’ என அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவிப்பு

Image
தோனியின் அறிவிப்பை தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும்  சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு இந்திய கிரிக்கெட் அணியின்  ஜாம்பவான் மற்றும் அனைவராலும் தல என அழைக்கப்படும் உலகிலேயே மிக சிறந்த கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ். தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வுபெருவதாக இன்று இன்ஸ்டக்ராம் பதிவில் அறிவித்துள்ளார்,  அவர் வெளியிட்ட அந்த பதிவில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற நாள் முதலான தனது புகைப்படங்களை வீடியோ வடிவில் வெளியிட்டு என்னை ஆதரித்து அன்பு காட்டிய அனைத்து ரசிகர்களுக்கும் மிக்க நன்றி: என  தோனி தெரிவித்துள்ளர் கடைசியாக தோனி 2019 அம் ஆண்டு நடந்த இந்தியா நியூஸிலாந்து க்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணிக்காக விளையாடினார்  தோனியின் அறிவிப்பை தொடர்ந்து சின்ன தல என்று அழைக்கப்படும் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஆன சுரேஷ் ரெய்னாவும்  சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை தோனியை போல் அவரும் இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியிட்டார். ரெய்னா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில் தோனி உள்ளிட்ட மற்ற இந்திய வீரர்களுடன் தான் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ரெய்னா, "தோனி, உங்களுடன் இணைந

அன்று பெரியாரின் தீர்மானம் இப்பொழுது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு

Image
பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!! பெண் அடிமைத்தனத்தையும் ஆண் ஆதிக்கத்தையும் ஒழிப்பதுடன் பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்கும் வகையில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கவேண்டும் என 1929ம் ஆண்டு தந்தை பெரியார் செங்கல்பட்டு மாநாட்டில் புரட்சிகரமான தீர்மானம் கொண்டுவந்தார் இதனை தொடர்ந்து 1989-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக் காலத்தில்  தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களால் பெரியார் வழியில் தமிழகத்தில், 'குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை உண்டு' என்று சட்டம் கொண்டுவரப்பட்டது அதேபோல, 2005-ம் ஆண்டு மத்திய அரசால் நாடு முழுவதும் பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை வழங்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டது. 2005ம் ஆண்டு  நடைமுறைக்கு வந்த இந்து சொத்துரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் பதிவானது. இந்த வழக்குகள் கடந்த சில ஆண்டுகளாக விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக நீதிபதி அருண்குமார் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பில், திருத்தப்பட்ட இந்து வாரிசு சட்

சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகைகள் பெற இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்

சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் முதியோர், விதவை உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகை பெற இ-சேவை மையத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் சென்னை மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை திட்டங்களுக்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு இசேவை மையம் வழியாக பொதுமக்கள் விண்ணப்பித்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது இதேபோல், இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, இந்திரா காந்தி தேசிய விதவை உதவித்தொகை இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் தொகை ஆதரவற்ற விதவைகள் உதவித்தொகை, ஆதரவற்ற கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித்தொகை, ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, திருமணமாகாத 50 வயதுக்கு மேற்பட்ட ஏழை பெண்களுக்கான உதவித்தொகை முதல் அமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்ட உதவித்தொகை ஆகிய திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு அரசு இ-சேவை மையம் மூலம் இணையதளம் வழியாக விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ந.காளிதாஸ், அவர்கள் அறிவிப்பு

செப்டெம்பர் 19ல் ஐபிஎல் போட்டிகள் தொடக்கம்

Image
ஐக்கிய அரபு அமீரகத்தில் செப். 19 முதல் நவ. 10 வரை ஐபிஎல் போட்டிகள் - ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து முடிவு செய்ய இந்தியன் பிரீமியர் லீக் நிர்வாக குழு (ஐபிஎல் ஜிசி) நேற்று காணொளி கட்சி மூலம் கூடியது. இந்தியாவில் நிலவும் கோவிட்- 19 வைரஸ்   நோயின் நிலைமையை கவனத்தில் கொண்டு , ஐபிஎல் ஜி.சி இந்த போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) இல் நடத்த முடிவு செய்து , இந்திய அரசாங்கத்தின் தேவையான அனுமதிகளை பெற்றதாகவும் துபாய் , ஷார்ஜா மற்றும் அபுதாபியில் போட்டிகள் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது. ஐபிஎல் 2020 கிரிக்கெட்   போட்டியனது செப்டம்பர் 19 தொடங்கி நவம்பர் 10, வரை நடைபெறும். 53 நாள் நடைபெறும் இந்த போட்டிகளில் 10 மதிய போட்டிகள் உள்ளன அவை இந்திய நேரப்படி மதியம் 3:30 க்கு தொடங்கும் , மாலை போட்டிகள் இந்திய நேரப்படி மாலை 07:30 IST மணிக்கு தொடங்கும் என அர்விக்கப்பட்டுள்ளது மகளிர் 2020 ஐபிஎல் போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் , மேலும் மகளிர் கிரிக்கெட் போட்டியில் மூன்று அணிகள் இடம்பெறும் எனவும் நான்கு போட்ட

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளார்

Image
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் ஐந்தாவது தொடர் இரண்டாவது முறையாக ஒத்திவைப்பு  தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்) கிரிக்கெட் போட்டியின் ஐந்தாவது தொடர் இரண்டாவது முறையாக கொரோன நோய்த்தொற்றுக்  காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது, இந்த ஆண்டு நவம்பரில் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்தலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் உள்ளது ஆரம்பத்தில் ஜூன் மற்றும்  ஜூலை மாதத்தில்  திட்டமிடப்பட்டிருந்த இந்த பிரபலமான டி 20 லீக் போட்டி, மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்ததால் மே மாதம் தமிழக கிரிக்கெட் வாரியத்தால் இது தள்ளிவைக்கப்பட்டது.   இந்த நிலையில் "டிஎன்பிஎல் போட்டியின் 5 வது தொடர் ஜூலை,ஆகஸ்ட்,செப்டெம்பர் மாதங்களில் நடத்தலாம் என தமிழ்நாடு கிரிக்கெட்  வாரியம் இருந்தது. இருப்பினும், தமிழ்நாட்டில் கொரோன நோய்த்தொற்று பிரச்சினை காரணமாக தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் இந்த போட்டிகளை நடத்தும் நிலையில் இல்லை எனவும்  5வது தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை 2020 நவம்பர் அல்லது 2021 மார்ச் மாதத்தில் நடத்த வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய செயலாளர்

தமிழகத்தில் சட்டபடிப்பு சேர்க்கை துவக்கம் 5-ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

5ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு வரும் 5-ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்  தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் அறிவிப்பு சென்னை, 01 ஆகஸ்ட் 2020:  தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளிவந்த நிலையில் கலை,அறிவியல் மற்றும் பொறியியல்  கல்லூரிகளில் சேர்க்கை துவங்கி உள்ளனர்  இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாகவும் அரசின் விதிமுறைகளின் படி கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வழங்குவத்திலிருந்து சான்றிதழ் சரிபார்ப்பு முதல் கல்லூரிகள் ஒதுக்குவது வரை அனைத்துமே ஆன்லைனில் நடைபெறும் என தெரிகிறது, மாணவர்களும் தங்கள் விரும்பிய படிப்பு மற்றும் கல்லூரிகளில் விண்ணப்பிக்க துடங்கிவிட்டனர் இந்த நிலையில் சட்டபடிப்புகளுக்கான சேர்க்கை எப்போது துவங்கப்படும் என மாணவர்கள் காத்துயிருந்தனர்  இதனை தொடர்ந்து தமிழகத்தில் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு வரும் 5-ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று  தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. வரும் 5-ஆம் தேதி முதல் www.tndalu.ac.in என்ற தளத்தில்விண்ணப்பத்தை  பதிவிறக்கம் செய்யலாம்